Sunday, August 23, 2009

நடராஜ முதலியார்


natarajamநடராஜ முதலியார் பிறந்தது 1885ல். தந்தை சென்னயில் புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார்.

கீச்சக வதம் வெளி வந்தாலும் நடராஜ முதலியார் அதை ஊமை படமாகவே (Silent movie) வெளியிட்டார். இவர் இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 35000 செல்வு செய்தார். 1917ல் 35000 என்பது பெரும் பட்ஜட். முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் செலவு கையை மீறியிருக்கலாம். 35 நாட்களில் எடுத்துவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. ஜெட் ஸ்பீடு தான்.

நடராஜ முதலியார் இந்த மாதிரி அட்வென்ச்சரில் குதித்தாலும் நிதானமாகவே யோசித்து எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது. அவரது நண்பராகிய நாடகத்தை வளர்க்கப் பாடுபட்ட பம்மல் சம்பந்தம் முதலியாரிடம் ஆலோசனை செய்தார். அந்த காலத்தில் தெரிந்த கதையை வைத்து படம் எடுத்தால் தான் படம் ஓடும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். தெரிந்த கதையை வைத்து படம் எடுக்கச் சொன்ன அவருடைய ஐடியாதான் இந்த திரௌபதி vs கீச்சகன்.

நடராஜ முதலியார் ஒரு பிஸினஸ்மேன். அவருக்கு இந்த கதை, கத்திரிக்காய் எல்லாம் எழுத வராது அல்லது தெரியாது. (ஏதோ நான் இதை எல்லாம் எழுதவதால் எனக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும் என நீங்கள் நினைப்பதாக நான் நினைப்பதால் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வேண்டாம், உண்மையை சொல்லிவிடாதீர்கள்!). எனவே அவர் சி. ரங்கவடிவேலு என்ற நண்பரை அனுகினார். ரங்கவடிவேலு அப்பொழுது சுகுன விலாஸ் சபா என்ற ஒரு நாடக குழுவை நடத்தி வந்தார். திரைக்கதையை எழுதும் பொறுப்பை அவரிடம் தள்ளிவிட்டார். அவரே நடிகர், நடிகைகளுக்கு கோச்சிங் கொடுத்தார். ரங்கவடிவேலுவை உபயோகப்படுத்திக்கொண்டது ஒரு பிரமாதமான் strategy என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் சுகுன விலாஸ் சபாவை முன்னதாக சம்பந்தம் முதலியார் முன்னதாக வளர்த்து வந்தார். அது ஒரு பெருமை. மேலும் ரங்கவடிவேலுவும் மிகவும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். பெரிய சபை கதையாசிரியரே திரைகதை எழுதினால் மக்கள் கூட்டம் அலை மோதி விடாதா? அது ஒரு வியாபாரத் தந்திரம் தானே? இன்று ஏ.வி.எம் ப்ரொடெக்‌ஷன்ஸ் கூட பாப்புலர் ஆன கலைஞர்களை வைத்து அதை யுக்தியை தானே கடைப்பிடிக்கிறது.

நடராஜ முதலியார் பெங்களூரில் ஒரு labஐ நிறுவினார். வாரம் ஒரு முறை பெங்களூர் சென்று தனது ஃபிலிம் சுருள்களை தயார் செய்வார். இப்படி அவர் அயராது உழைத்துக் கொண்டிருக்கையில் இரண்டு துயர சம்பவங்கள் அவருடைய திரைப்பட உலக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அவர் India film companyஐ விட்டு வேலூரில் சொந்த ஸ்டுடியோ வைத்திருந்தார். அது தீயில் கருகியது. மேலும் அவருடைய மகன் காலமானார். 1923ஆம் வருடத்துடன் அவருடைய திரை சகாப்தம் முடிவடைந்தது.

அவருடைய மற்றத் திரைப்படங்கள்:

திரௌபதி வஸ்திரபரனம் (1917)
மைத்திரேயி விஜயம் (1918)
லவ குசா (1919)
மஹிரவனன் (1919)
மார்க்கண்டேயன் (1919)
கலிங்க மர்தனம் (1920)
ருக்மணி கல்யாணம் (1921)

No comments:

Post a Comment