
உணர்வுகளை பரவவிட்டு மாற்றம் நிகழ்த்தும் குழந்தைகள் கதை..
விராட்சி மலை பள்ளியில் புதிதாக சேருகிறான் மாணவன் கிஷோர். அதே பள்ளி யில் படிக்கும் வாத்தியார் மகன் ஸ்ரீராம் சண்டித்தனம் செய்வதுடன் சகமாண வர்களை கீழ்படிய நிர்ப்பந் திக்கிறான். கிஷோர் மறுக்க மோதல். இருவரும் கோஷ்டி சேர்த்து சண்டை போடுகின்றனர். இவர்கள் பகை பெற்றோர் மத்தியிலும் மோதல் உண் டாக்குகிறது. இன்னொரு புறம் கிஷோர் சித்தப்பாவும், ஸ்ரீராம் அக்காளும் காதல் வயப்படுகின்றனர். வீட் டுக்கு தெரியாமல் தனிமை யில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் காதலை இரு சிறுவர்களும் நேரில் பார்த்து வெறுக்கிறார்கள். வீட்டிலும் பற்ற வைக்கின்றனர்.சிறுவர்கள் சேர்ந்தார்களா? காதல் நிறைவேறியதா என்பது கிளைமாக்ஸ்... குழந்தைகள் பற்றிய கதையை அவர்களின் யதார்த்த உணர்வுகளுடன் குடும்பம், காதல், காமெடி, சென்டிமென்ட் போன்ற அம்சங்களை கலந்து கச்சிதமாக செதுக்கி இயக்கு னர் பாண்டிராஜ் சபாஷ் போட வைக்கிறார்.
சிறுவர்கள் கிஷோர், ஸ்ரீராம் பாத்திரங்களில் ஒன்றுகின்றனர் அன்புக்கரசு ஐ.ஏ.எஸ். என்று தனது பெயருடன் லட்சிய படிப்பை இணைத்து பள்ளியில் சேரும் கிஷோர் பிறகு இதர மாணவர்களையும் அதே சிந்தனைக்கு மாற்றி கொண்டு செல்வது அழுத்த மான பதிவு.
என் தந்தை தான் வாத்தியார் என மிடுக்குடன் குமுறும் ஸ்ரீராம் அப்பாவிடம் கிஷோரை மாட்டிவிடு வதும் பதிலுக்கு கிஷோர் நன்னடத்தையை அவர் புகழ்வதும் திருப்பம். கருநாக்கு காரன் சாபம் போட்டால் அன்புக்கரசு அழிஞ்சு போவான். ஆத்தா ளுக்கு காசு வெட்டி போட்டா ஆளே போயிடுவான். என்ற இளசுகளின் சதித் திட்டங்கள் கலகலப்பு.
இப்ப பாரேன் பல்லை கடிப்பான், இப்பபாரேன் கையை முறுக்கி அடிப்பான் என்று ஸ்ரீராமை உசுப்பேற் றும் பக்கடா, தோள் மேலகை போட்டா குள்ளமாயிடுவேன் என தடுக்கும் குள்ளமணி கிஷோருக்கு வரிந்து பேசும் மங்களம் தேசியகீதம் பாட்டு போட்டு சிறுவர்கள் சண்டையை நிறுத்தும் மனோண்மனி தந்தையுடன் சண்டை போடும் வாத்தி யாரை ஓடிப் போய் வயிற்றில் பிஞ்சுகை யால் குத்தும் குழந்தை புஜ்ஜிமா என அனைத்து பாத்திரங்களும் நெஞ்சுக்குள் ஊடுருவி நிற்கின்றன.
விமல், வேகாவின் செல் போன் காதல் கவிதை... வேகா வெள்ளைச் சிரிப்பில் மனசுகளை கொள்ளை யடிக்கிறார்.
தாய்-தந்தை சண்டையால் படிப்பில் தடுமாறும் கிஷோ ரையும் அவன் தங்கை யையும் கண்ணுற்ற சொக்க லிங்க வாத்தியார் அவர்கள் தந்தையை அழைத்து விட்டு கொடுத்து வாழப் பழகினால் சண்டை சச்சரவு இல்லை என்று அறிவுரை சொல்வது பாடம்...
சொக்கலிங்க வாத்தியா ராக வரும் ஜெயபிரகாஷ் வெள்ளைச் சாமியாக வரும் சிவகுமார், முத்தடங்கி, செந் தில் குமாரி, பாத்திரங் களும் மண்வாசனை வீசுகின்றன. சிறுவர்களுக்கு எதிர்கால கனவை தூண்டவும், பெரியவர்களுக்கு இளமை கால நினைவுகளை ஞாபக படுத் தவும் செய்வதில் இயக்குனர் வென்றுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன், இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளுகின்றன. முதல் பாதியில் சிறுவர்களின் வம்பு தும்புகள் நீளத்தை குறைத்து இருக்கலாம். கிளை மாக்சிலும் செயற்கைத்தனம்.
No comments:
Post a Comment